No results found

    ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி


    தேவையான பொருட்கள் : 

    துவரம்பருப்பு - கால் கப், பொட்டுக்கடலை - ஒரு கப், பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

    செய்முறை: 

    வெறும் கடாயில் துவரம்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதேபோல, சீரகம், பொட்டுக்கடலை, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை வறுத்து, மற்ற பொருட்களுடன் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் பொடி செய்தால்… ஆந்திரா பருப்பு பொடி தயார். இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட… அட்டகாசமான ருசியில் இருக்கும். அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் சேர்த்துச் சாப்பிடால், சுவை கூடும்.

    Previous Next

    نموذج الاتصال