No results found

    10 நிமிடத்தில் காலை டிபன் செய்யலாம் வாங்க...


    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 கப் 

    கடுகு - 1/4 டீஸ்பூன் 

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 

    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் 

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 

    காய்ந்த மிளகாய் - 3 

    பச்சை மிளகாய் - 2 

    கறிவேப்பிலை - 1 கொத்து 

    தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி 

    வெங்காயம் - 1 

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

    செய்முறை : 

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். சூடாக இருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கிண்டிக் கொண்டே வர வேண்டும். இதனால் நன்றாக மாவு வெந்து வரும். பின்னர் உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இட்லி தட்டில் ஒரு காட்டன் துணியை விரித்து அதன் மேல் இந்த உருண்டைகளை வைத்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். மிருதுவான ஆரோக்கியம் மிகுந்த கார உப்பு உருண்டை தயாராகி இருக்கும். கட்டாயம் மாவில் சுடு தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும். அப்போது தான் மாவு மிருதுவான உருண்டையாக நமக்கு வரும். இல்லையென்றால் மாவு கெட்டியாக கடிப்பதற்கு சிரமப்படும் அளவிற்கு வந்து விடும். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    Previous Next

    نموذج الاتصال