தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை - 1
புதினா - சிறிது
துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மிக்சியில் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் புதினா, துருவிய இஞ்சியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும். அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். அதிகளவு தொப்பை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.